வெள்ளி, 22 ஏப்ரல், 2011

ஒளிக் கீற்று



இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்கெல்லாம்
அடங்கலும் தாமாய் நின்ற் றாடுகின்றாரே !

--- திருமூலர் (பத்தாம் திருமுறை - ஒன்பதாம் தந்திரம் - 15 - அற்புத கூத்து ).

மூளை - மனித உயிரின் எல்லா உள்கட்டமைப்பையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யும் சர்வதிகாரி . மனம் என்னும் தங்க கருவூலத்தை கனத்த பூட்டிட்டு , அதன் சாவியை நம்மிடமே தரும் மாயாவி . அள்ளி பருகுவோர் அறிவாளியாகவும் , முங்கி முத்தெடுப்போர் ஞானி யாகவும் , மூச்சடைத்து இறப்போர் பித்தனாகவும் ஆக்க செய்யம் பூதம் .

நவீன அறிவியல் - இடப்பக்க மூளையை ஒரு serial processor ( X86 போல் ) ஆகவும் , வலப்பக்க மூளையை parallel processor ( graphics processor ) ஆகவும்
உருவகப்படுத்து கின்றது ( ஆக நம் மூளை ஒரு fusion Architecture - Thanks to AMD ) நம் மொழி திறன் , ஆளுமை , திறனாய்வு , பகுப்பறிதல் , சீரமைப்பு , கட்டுப்பாடு இவ் வனைத்திற்கும் நம் இடப்பக்க மூளையே காரணி , இதை முறையே Language Interpretation , Instruction Decoding , Arithmetic , Logic Control போன்ற செயல் களோடு ஒப்பிட்டு கொள்ளலாம் . இக்கணம் நாம் உணரும் , நுகரும் , துய்க்கும் அனைத்திற்கும் காரணி நம் வல ப்பக்க மூளை - கிட்ட தட்ட இது ஒரு image rendering செயல் .

மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த , நம் இந்திய மரபு - இதையே - அர்தநாரி தத்துவமாய் நம்மக்கு உபதேசி க்கின்றது . மொழி , ஆளுமை , நுண் உணர்வு போன்ற நம் இடப்பக்க மூளையின் செயல்களை பெண்ணாய் - சக்தியாய் உருவக படுத்துகிறது . இக்கணம் , இன் நொடி யின் செயல்களையே கடமையாய் கொண்ட வலப்பக்க மூளையை - ஆணாய் - சிவமாய் - இப்ப்ரபஜந்தின் நுழைவு வாயிலாய் - காட்டுகின்றது .


இதை ஒப்பு நோக்கும் விதமாய் , Jill Bolte Taylor என்னும் மூளை நரம்பியல் விஞ்ஞானி , இடப்பக்க மூளை செயல் இழந்ததன் விளைவாய் , தனக்கு ஏற்பட்ட "Out of Body experience" பற்றி விரிவாய் , சுவை பட கீழே காணும் கானொளியில் கதைக்கிறார்






முப்பதி ஏழு வயதான Taylor , ஒரு Harvard பட்டதாரி . எட்டு ஆண்டு களுக்கு முன் தனக்கு ஏற்பட்ட மூளை செயல் இழப்பும் , அதனால் தன்னுக்கு உண்டான , பிரபஞ்ச தொடர்பும் , நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன . மேலும் தகவல் அறிய Book: My Stroke of Insight
அவரை பொறுத்த வரை நாம் ஒவ்வொருவரும் , நம் வல பக்க மூளையால் , ஒருங்கிணைக்க பட்ட ஒளி கீற்றுகள் . நாம் ஒவ்வொருவரும் , நம் உள்ளகட்டமைபின் ஊடாய் , இப் பிரபஞ்ச சக்தியில் மூழ்கி முத்தெடுக்க முடியும் . நம் சைவ மரபோ இதையே , கடவுளாய் - சிவமாய் கற்பிக்கிறது . மாட்டு இடையனான திருமூலனோ Taylor சொல்வது போலே தன்னக்குள்ளே மூழ்கி , பிற உயிரில் தம்மை கண்டான் .


இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்கெல்லாம்
அடங்கலும் தாமாய் நின்ற் றாடுகின்றாரே !

எம் தந்தையாகிய சிவனது இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்ட, எம் தாயாகிய சத்தியும் அவளுக்குத் தனது இடப் பாகத்தைத் தந்த சிவனும் என ஒருவரே இருவராய் நின்று கூத்தியற்று கின்றார்கள்` என்பதை நானும் கருதலளவையால் உணர்ந்து கொண்டேன். ஆகவே, துணியால் பொதியப்பட்ட மூட்டை போல் ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டுள்ள அனைத்துயிர்களின் பொருட்டாகவே அவ்விருவரும், மாயா காரியங்கள் அனைத்திலும் நிறைந்து நின்று, அவைகளை இயக்கித் தாம் ஆடுகின்றனர்` எனப் பிறர்க்கும் உணர்த்துகின்றேன்


ஆக மொத்தம் நாம் ஒருவர் , நமக்குள் இருவர் !


-சிவகுமார்




7 கருத்துகள்:

  1. Nice Post,good thinking but நாங்க லாம் இந்த இடப்பக்க மூளை , வலப்பக்க மூளை lam strain பண்ணாம understand பண்ற மாதிரி ஒரு post போட்டா நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. OM - Thanks for the comments, It is very good that u got strain in both parts of your brain . This implies that
    a. U have a brain :)
    b. The left and Right of it are working :)

    Just Kidding :)

    பதிலளிநீக்கு
  3. // OM - Thanks for the comments, It is very good that u got strain in both parts of your brain . This implies that
    a. U have a brain :)
    b. The left and Right of it are working :)// ur always dealing with complicated, valuable issues. okey okey arasiyala ithalam sagajam

    பதிலளிநீக்கு
  4. சிவா இந்த திருமூலர் பாட்டு லாம் எப்படி இவ்ளவு involvement

    பதிலளிநீக்கு
  5. Actually My Grandfather is a Tamil literate , I got some thing from him , This song I searched in internet , and got it . Thanks for the question

    பதிலளிநீக்கு
  6. சிவா, POST நல்லா இருக்கு.

    //அள்ளி பருகுவோர் அறிவாளியாகவும் , முங்கி முத்தெடுப்போர் ஞானி யாகவும் , மூச்சடைத்து இறப்போர் பித்தனாகவும் ஆக்க செய்யம் பூதம்//

    இதுல பூதத்துக்கு பதிலா 'தண்ணி' சம்பந்தமா ஏதாவது போட்டா 'கிக்'கா இருந்து இருக்கும். ;)

    கடைசி பாரா FONT SIZE சின்னதா இருக்கு. COPY PASTE? Even if the content from other site better put it in a consistent way.

    //கானொளியில் கதைக்கிறார்// WoW!

    //மனம் = தங்க கருவூலத்தை// Why?

    பதிலளிநீக்கு