வெள்ளி, 1 ஏப்ரல், 2011

உண்மத்தன்



உன் அருகாமையே , நீ தான் அவள் என உணர்த்திவிட ,
என் மன கசடுகள் அழிந்திடும் வேலையில் ,
உண்மத்தானாய் இடம் மறந்து , செயல் மறந்து ,
நானே நீயாய், நீயே நானாய் நின்ற இரு நொடி,
மீண்டும் இப் பூமி வந்து , இது கனவோ என மயங்கிடும் வேலையில் ,
இது கனவல்ல , இவள் அவளே என
தலையில் அடித்து சத்தியம் செய்தது கோவில் மணி ,
ஆம் மணி சொல்வது உண்மையே ,
அவளே இவள் என்ன வழிகாட்டி மரம் கை காட்ட ,
ஒட்டி கொண்டிருந்த கடைசி மன திரையும் விலகி உள்ளொளி பரவ
அங்கம் அங்கமாய் அழகு ,
என் நூற்றாண்டு பசிக்கு, இவளே உகந்தவள் என கண்டேன்
நர்த்தனம் , ஆலிங்கனம் , எல்லாம் என்னுல் நடந்தேறின
தேடி கண்டு கொண்டேன் , மனிதர் உணர்ந்து கொள்ளா காதலை !
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல !

3 கருத்துகள்:

  1. Congrats Siva on your first blog.

    The post is very good.

    I have a little trouble with the line "என் நூற்றாண்டு பசிக்கு, இவளே உகந்தவள் என கண்டேன்
    " But that is ok. If I read it for some more time, I may get the actual usage of this line ;)

    பதிலளிநீக்கு
  2. Nice one..
    However check your editor

    வேலையில், என்னுல்

    பதிலளிநீக்கு
  3. "என் நூற்றாண்டு பசிக்கு, இவளே உகந்தவள் என கண்டேன்--- very nice

    பதிலளிநீக்கு